செவ்வாய், அக்டோபர் 04, 2011

.


كَذَلِكَ يُبَيِّنُ اللّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ

...அநீதி இழைத்தோரை அல்லாஹ் விரும்ப மாட்டான். திருக்குர்ஆன். 3:104



ஆப்கானிஸ்தானில் ஆட்டம் காணும் அமெரிக்கக் கூடாரம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...



அமெரிக்க வெள்ளை மாளிகை தாலிபான் போராளிகளிடம் சமாதானப் பேச்சு வார்த்தையை முடுக்கி விட்டுள்ளதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் பத்திரிகை கூறுகிறது. இதற்கு முன்பு ஒருமுறை அமெரிக்க வெளியறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஒருப் பேட்டியில் தாலிபான்கள் ஆயுதங்களை கீழேப்போட்டால் எந்த நிமிடமும் பேச்சு வார்த்தைக்குத் தயார் என்றும் அறிவித்திருந்தார். 

கடந்த காலங்களில் ஒபாமா தனது நம்பிக்கைக்குரிய ஆட்களை அனுப்பி தாலிபான் போராளிகளை சந்தித்து ரகசியமாக பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் அதே நியூயார்க் பத்திரிகை செய்தியின் இறுதியில் கூறப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் நேட்டோப் படைகள் படுதோல்வி அடைந்து வருவதை அறிந்த சர்தாரி கடந்த ஆகஸ்ட் 22ல் ஃப்ரான்ஸ் நாட்டுப் பத்திரிகை ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் ஆப்கான் மக்களின் இதயங்களை வெல்வதிலும், தாலிபான்களுடனான யுத்தத்தில் வெல்வதிலும் அமெரிக்கா தோற்று வருகிறது என்று கருத்துக் கூறியதற்காக அவர் மீது வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கடும் கண்டம் தெரிவித்திருந்தார் இன்று நியூயார்க் பத்திரிகையே அமெரிக்காவின் அன்டர்கிரவுன்ட் தூதை அம்பலப் படுத்தி விட்டது.

தாலிபான்களுடன் பேச்சு வார்த்தை என்றுக் கூறி ஆப்கானை விட்டு ஓட்டம் பிடிக்க அமெரிக்கா எடுத்த திடீர் முடிவுக்குக் காரமாக அமைந்தது சமீபத்திய தாலிபான்களின் அதிரடி நடிவடிக்கைகளாகும். இவ்வளவு சீக்கிரம் ஆப்கானிஸ்தானை விட்டு ஓடுவது கன்டிப்பாக அவர்களது முந்தைய திட்டமாகவும் இருக்கவில்லை அதனால் தான் சர்தாரி மீது சீறி விழவும் செய்தார் ராபர்ட் கிப்ஸ். 

கடந்த நவம்பர் 2010ல் கூடிய 48 நோட்டோ நாடுகளின் லிஸ்பன் உச்சி மாநாட்டில் 2014வரை ஆப்கானிஸ்தானில் நேட்டோப் படைகள் நீடிப்பதற்கான ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2014க்குப் பிறகாவது நேட்டோப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து சென்றுவிடும் என்று தாலிபான்கள் கணவு காண வேண்டாம் 2014க்குப் பிறகும் கூட ஒப்பந்தம் புதுப்பிக்கப்படலாம் என்றும் நேட்டோ செயலர் அனஸ்போ ராஸ்முசன் தெரிவித்திருந்தது சமாதானப் பேச்சு வார்த்தை திடீர் முடிவு என்பதற்கு ஆதாரமாகும்.  

ஆதாயம் இல்லாமல் அமெரிக்கா ஆற்றைக் கட்டி இறைக்காது என்பது உலகறிந்த செய்தியாகும். உலகில் எங்காவது இரு நாடுகளை மூட்டிவிட்டு குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு ஆதரவாகப் போர் புரியும்போது போரில் ஈடுபடுத்தப்படும் ஆயுதங்களுக்கு ஹை ரேட்டும், போர் வீரர்களுக்கும் போர் வீராங்கனை(?)களுக்கும் ஹெவி சம்பளமும் நிர்ணயித்துக் கொண்டு முதலில் வான்வழி தாக்குதலை தொடுத்து தரைப்போரில் ஈடுபட முடியாத அளவுக்கு எதிரிநாட்டு போர் வீரர்களை குண்டுகளைப் பொழிந்து அழித்து விடும். மிஞ்சியவர்கள் தரைப் போருக்குத் தயாரானால் தரைப் போர் விதிமுறைகளை அப்பட்டமாக மீறி ஹெலிகாப்டர்கள் மூலம் குண்டுகளை பொழிந்து பஸ்பமாக்கி விட்டு தரைப் படையிலும் நாங்கள் தான் வென்றோம் என்று மார்தட்டிக் கொண்டு அமெரிக்கப் போர் வீரர்களை பாதுகாப்பாக வீடு கொண்டுப் போய் சேர்த்து விடும். 

மேற்கூறும் அமெரிக்காவுக்கு ஆதரவான அம்சங்கள் அனைத்தும் ஆப்கானிஸ்தானில் தலை கீழ்.  ஆப்கானிஸ்தானில் போர் நடக்கும் ஒவ்வொரு நாளும் அமெரிக்காவுக்கு இழப்பு 1500 கோடி என்று அமெரிக்காவின் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறுகிறார். ஆப்கானிஸ்தானில் இறக்கி விடப்பட்ட பன்னாட்டுப் படைகள் தாலிபான்களின் கொரில்லாத் தாதக்குதலினால் 2001லிருந்து செத்து மடிந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2270 ( குறைவாக அறிவித்தே இத்தனை என்றால் முறையாக அறிவித்தால் எத்தனையாக இருக்கும் என்பதை வியூகித்துக் கொள்ளுங்கள்) 2009ல் மட்டும் 521 நேட்டோப் படையினரை பலி கொடுத்ததால் நோட்டோவின் கூடாரம் ஆப்கானிஸ்தானில் 2009 லேயே ஆட்டம் காணத் தொடங்கியது, அதே 2010ல் பலி எண்ணிக்கை 700ஆக உயர்ந்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை உலுக்கியது. இதையும் மீறி ஆப்கானிஸ்தானில் நிலை கொள்வதற்கே தங்களின் திட்டத்தை தீட்டி அதற்கான இறுதி முடிவை எடுத்தனர்.

நாள் தோறும் தாலிபான்களிடம் குண்டடிப் பட்டு அவசர சிகிச்சை அளித்து காப்பாற்ற முடியாமல் மடிபவர்களே அதிகம் என்பதாலும் அதற்கான அவசர சிகிச்கை அளிப்பதற்கான உபகரனங்களும் ஆப்கானிஸ்தான் நேட்டோ ராணுவ முகாமில் குறைவு என்பதை அறிந்து அதை அதிகப்படுத்திக் கொண்டு ஆப்கானில் கூடாரத்தை அழுத்தமாக ஊண்டுவதற்கு முடிவு செய்து சுமார் 42 மில்லியன் டாலர் மதிப்பிலான அளவுக்கு மருந்துகளும், மருத்துவ உபரனங்களுமாக ஆப்கானுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆப்கானிஸ்தான் வரை பாதுகாப்பாக போய்ச்சேர்ந்த மேற்படி கன்டெய்னர்கள் நேட்டோ ராணுவ முகாமுக்கு போய் சேராமல் இடையில் மாயமானது தான் அமெரிக்காவை தாலிபான்களிடம் கதவைத் தாழிட்டுக் காலில் விழ வைப்பதற்கு எடுத்த முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
இன்னுமொருக் காரணம் கடந்த டிசம்பர் 2010ல் ராணுவ வாகனம் ஒன்றில் தாலிபான்கள் மீது தாக்குதலுக்காகப் பயணித்த நேட்டோப் படையினரின் மீது தாலிபான் போராளிகள் தொடுத்த திடீர் தாக்குதலில் சம்பவ இடத்தில் ஐந்து நேட்டோவினர் மாண்டதுடன் 9 நோட்டோவினர் படுமாயமடைந்தனர். இதற்கு பழிதீர்க்க நினைத்த நோட்டோவின் காண்டா மிருகங்கள் ஜனவரி 13ல் தாரிக் கொலாச்சே என்ற ஆப்கானிஸ்தானின் சிறிய குக்கிராமத்தில் அப்பாவி மக்கள் மீது கணரக குண்டுகளைப் பொழிந்து மொத்த கிராமத்தையுமே நிர்மூலமாக்கி விட்டனர். இதற்கு தாலிபான் போராளிகள் பதிலடி கொடுக்காமல் விட மாட்டார்கள் என்பதை அறிந்தவர்கள் தாலிபான்களின் கோட்டைகள் மீது சமாதானப் புறாவைப் பறக்க விட்டு வேகம் வேகமாக ஓடுவதற்கு முடிவுக் கட்டி விட்டனர்.

...அநீதி இழைத்தோரை அல்லாஹ் விரும்ப மாட்டான். திருக்குர்ஆன். 3:104



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்