11:67. அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.
வம்பிக்கிழுக்கும் வல்லரசுகள்
தாலிபான்கள் ரஷியர்களை விரட்டியடித்து விட்டு ஆப்கானிஸ்தானில் முழு இஸ்லாமிய ஆட்சியை பிரகடனப்படுத்தியதிலிருந்து அவர்கள் அமைத்திருந்த ஆட்சியை அகற்றி அவர்களை தீவிரவாதிகளாக, காட்டுமிராண்டிகளாக உலக அரங்கில் சித்தரிக்கச் செய்வதற்காக அமரிக்க வாழ் யூதர்கள் அன்றைய ஜனாதிபதி புஷ்ஷிலிருந்து இன்றைய ஜனாதிபதி ஒபாமாவையும், உலகின் முக்கிய ஊடகங்களையும் கையில் எடுத்துக் கொண்டதில் ஓரளவு வெற்றிப் பெற்று விட்டார்கள் என்றேக் கூறலாம்.
உலக மக்களிடம் அவர்களை தீவிரவாதிகளாக, காட்டுமிராண்டிகளாக சித்திரித்துக்காட்டி அதில் ஓரளவு வெற்றிபெற்றப் பின்னர் தாலிபான்களை ஆட்சியிலிருந்து முழுமையாக துடைத்தெறிந்து தங்களின் எடுபிடி ஒருவரை (கர்ஸாயை) பதவியில் அமர்த்தியப் பின்னரும் கூட தாலிபான்கள் என்றொரு இனமே உலகில் வாழக்கூடாது என்று பல வருடங்களாக அவர்கள் மீது பொய்க் காரணங்கள் கூறி பலமுறை பலமான தாக்குதலை தொடுத்து அதிகமாக அப்பாவி மக்களின் உயிரையேக் குடித்து வருகின்றனர்.
இப்பொழுது ஆப்கானிஸ்தானின் மர்ஸா பகுதியில் தாலிபான்கள் வலுவாகக் கால் ஊண்டி இருப்பதாகவும், அங்கு அவர்களின் நிழல் அரசாங்கம் இயங்குவதாகவும் அவதூறுக் கூறி தீவிர தாக்குதலில் இறங்கி எண்ணிலடங்கா அப்பாவி மக்களை தினந்தோறும் அநியாயமாக கொன்று குவித்து வருகின்றனர் 22-02-2010 அன்று மர்ஸாப் பகுதியில் மலை ஓரத்தில் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு அமைதியாக ஓடிக்கொண்டிருந்த பேரூந்து ஒன்றின் மீது கணரக குண்டுகளை வீசியதில் அதில் பயணித்த பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் அனைவரும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர் இதையறிந்த பொதுமக்கள் கர்ஸாய் மீது கடும் கண்டன் தெரிவித்தனர். பொதுமக்களின் கோபத்தை அறிந்த கர்ஸாய் தனது பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக தனது எஜமானர்களுக்கு தகவல் அனுப்பி ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள ராணுவ தளபதி ஜெனரல் ஸ்டான்லி மெக்கிரைஸ்டலை தவறுதலாக நடந்து விட்டதாகக் கோரி மன்னிப்புக் கேட்க வைத்துள்ளார்.
துல்லியமாக கண்டறியும் நவீண தொலைநோக்கு சாதனங்களின் துணையுடன் தாக்குதல் நடத்தும் ஆற்றல் பெற்றது அமெரிக்க ராணுவம் என்பது உலகறியும். திட்டமிட்டே இதுப் போன்ற ஈனச்செயலை செய்து விட்டு தவறுதலாக நடந்து விட்டதாக பொய்கூறி வருவதை கடந்த காலங்களில் அவர்களது அட்டூழியம் கட்டவிழ்த்து விடப்பட்ட ஈராக்கில் தினந்தோறும் நடைபெற்று வந்ததை அறிந்தோம் இதில் நடுநிலையான ஊடகங்களின் பார்வைக்கு கொண்டு சென்ற ஒன்றிரண்டு சம்பவங்களுக்காக மட்டும் அதே ஊடகங்கள் வாயிலாக அனாமதேய வருத்தம் ஒன்றை அறிவிக்கச் செய்து விடுவார்கள். ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாத ஏராளமான நிகழ்வுகள் இந்த ஈவிரக்கமற்றப்பாவிகளால் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. போன உயிர் போனது தான் இதை நேர்ரமயான முறையில் விசாரித்து நீதி வழங்க உலகில் நீதிமன்றமே கிடையாது. சர்வதேச நீதிமன்றங்கள், செஞ்சிலுவைச சங்கங்கள் இயங்குவதெல்லாம் அவர்களுக்காக மட்டுமே முஸ்லிம்களுக்காக அல்ல.
இவைகள் அப்பாவி மக்களின் மீது திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்களே என்பதற்கு இன்னும் சில சான்றுகள்.
ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்ரமித்திருந்த காலத்தில் அதன் சுதந்திரப் போராளிகளை வென்று ஒடுக்க முடியாமல் திணறியதற்கு அங்கு அமையப் பெற்றுள்ள அடர்ந்த மலைகள் என்பதும் அதனைக் குடைந்து போராளிகள் அமைத்துக் கொண்ட இருப்பிடங்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. அந்த மலைகளுக்கு மேல் ரஷிய விமானங்கள் பறந்து பறந்து பல்லாயிரக்கணக்கான சக்தி வாய்ந்த குண்டுகளை வீசியும் ஒன்றும் செய்ய முடியாமல் வந்த வழியே திரும்பிச் சென்ற கதை இவர்கள் அறிந்ததே !
அதனால் அமெரிக்காவிலிருந்து புதிதாக அனுப்பப்பட்ட கூடுதல் படைகள் பலநாட்கள் நிலைகொண்டும் தாலிபான்களை அடித்து கணக்குக் காட்ட முடியாமல் திணறும் பொழுது மனித உயிர்களின் மீது அறவே இறக்கமில்லாத கல்நெஞ்சம் கொண்ட ராணுவ ஜெனரல்கள் அவ்வப்பொழுது அப்பாவி மக்;களை அவர்களின் முக அடையாளம் தெரியாத அளவுக்கு உடல்களை சிதறச் செ;யயும் தாக்குதல்களைத தொடுத்து சிதறிய சடலங்களை படமெடுத்து இத்தனை ஆயிரம் தாலிபான்களை அழித்து விட்டோம் என்ற கணக்கை சமர்ப்பிப்பார்கள். துப்பாக்கியினால் சுட மாட்டார்கள் அவ்வாறு சுட்டால் அடையாளம் தெரிந்து விடும் என்பதற்காகவே அதிகமாக வாகணங்களில் மீது குண்டுகளை வீசுவார்கள் இதில் தான் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு நசுங்கி விடும்.
இதுப்போன்று ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு முறையும் அப்பாவி மக்களை அடித்து நொறுக்கி சல்லடையாக துளைத்தெடுத்து சிதறிய மய்யித்துகளின் மீது இரத்த தாகம் தீரும் வரை நடந்து முடிந்தப் பின் அவர்கள் நடுநிலையான மக்களுக்குக் கூறுகின்ற காரணங்கள்
- பின்லேடனை ஒப்படைக்க மறுக்கின்றனர்.
- தாலிபான்கள் பேச்சுவார்த்தைக்கு வரமறுக்கின்றனர்.
இவ்வாறு இவர்கள் கூறும் வடிகட்டியப் பொய்களை வெட்கமின்றி அரங்கேற்றுவதற்கு தயாராக இருக்கும் உலகின் சிலப் பாஷிச ஊடகங்கள்.
நாகரீகமற்ற காட்டுமிராண்டிகளா ?.
அவர்கள் சிறந்த பண்பாளர்கள், நல்லொழுக்கமுடையவர்கள், நாகரீகமானவர்கள் என்பதற்கு அவர்களுடன் தங்கி இருந்தவர்கள் பலருடைய மனம் திறந்த பேட்டியை உதாரணமாக்கலாம் அதில் முக்கியமாக அமெரிக்காவின் நியூஸ் வீக் பத்திரிகைக்கு பேட்டி அளித்து உலக கவனத்ததை ஈர்த்த யுவான் ரிட்லி அவர்களின் அனுபவம்.
தாலிபான்களை சந்தித்து நேரடிப் பேட்டி எடுத்து வெளியிடுவதற்காக 1998ல் அமெரிக்கா ஆப்கான் மீது உச்சக்கட்ட தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த அபாயகரமான நாட்களில் தலைக்கு மேலிருந்து பொழியும் குண்டுகளை துச்சமெனக் கருதி தாலிபான்களின் கோட்டைக்குள் புகுந்து அவர்களால் கைது செய்யப்பட்டு சில நாட்கள் அவர்களுடன் தங்கி இருந்த பிரித்தானிய பத்திரிக்கையின் நிரூபர் வீரமங்கை யுவான் ரிட்லி அவர்கள் தாலிபான்களால் விடுதலை செய்யப்பட்டு பிரிட்டன் சென்றப் பின் தாலிபான்களின் நன்னடத்தையை நியூஸ் வீக் பத்திரிகைக்கு பேட்டியளித்து விட்டு அதேப் பத்திரிகையில் கிருஸ்தவர்களின் மதவெறியையும், முஸ்லீம்களின் மார்க்கப்பற்றையும் தாலிபான்களின்; மூலம் உணர்ந்து கொண்டு இஸ்லாத்தை நோக்கிப் புறப்படுகின்றேன் என்றுக் கூறியது தாலிபான்கள் சிறந்தப் பண்பாளர்கள், ஒழுக்கசீலர்கள் என்பதற்கு மிகப்பெரிய உதாரணமாகும்.
1. பின்லேடனை ஒப்படைக்க மறுக்கின்றனர்.
பின்லேடனை ஒப்படைப்பதற்கு பின்லேடன் மீது யூதப் பொய்யர்களின் அமெரிக்க கைக்கூலிகள் கூறும் காரணங்கள் உண்மையானவைகளா ?
பின்லேடன் தீவிரவாதி என்று அவர்கள் சமர்ப்பிக்கும் காரணங்கள் சரியானவைகளாக இருந்தால் உண்மையில் தீவிரவாதத்தை விரும்பாத அமைதியை போதிக்கும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகவும், ஆட்சி நெறியாகவும் ஆக்கிக் கொண்ட நற்பண்பாளர்களாகிய தாலிபான்களுக்கு அது அழகல்ல என்பதில் எள்ளலவும் மாற்றுக்கருத்தில்லை.
கருங்கடலுக்கடியில் லாவகமாக நீந்தித் தவழும் கருப்பு மீன்களின் மச்சங்களைக் கூட துல்லியமாகப் படமெடுத்து உலகுக்கு அனுப்பும் ஆற்றல் வாய்ந்த சேட்டிலைட்களை ஆகாயத்தில் மிதந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கையில் மிமிக்ரி செய்யப்பட்ட ஆடியோ வாய்ஸை மானங்கெட்டவர்கள் வைத்துக் கொண்டு இது தான் பின்லேடன் தீட்டிய சதிதட்டத்திற்கு ஆதாரம் என்பது வினோதமாக இல்லையா ?
1998ல் கிழக்காப்பிரிக்;காவில் அமெரிக்க தூதரகத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்கு பின்லேடன் தான் காரணம் என்றுக் கூறி ஆப்கான் மீது தாக்குதல் நடத்தியபொழுதே தாலிபான்களின் தலைவர் உமர் முல்லா அவர்கள் அப்போதைய அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் ஆதாரங்களை தரும்படி நேரடியாக தொலைபேசியில் உரையாடியதை அப்பொழுது அல்ஜஸீரா தொலைக் காட்சி ஒலிபரப்பியதை அனைவரும் அறிவர் அதற்கான ஆதாரத்தை அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் இன்றுவரை ஒப்படைக்க வில்லை.
நீதியுடனும், மனசாட்சியுடனும் நடக்கக்கூடிய தாலிபான்கள் அமெரிக்காவுடைய பின்லேடனின் மீதான குற்றச்சாட்டை அலட்சியப்படுத்தி விட்டுவிடாமல் பின்லேடனை விசாரணைக்குட்படுத்தி அவரது ஆதரவாளர்களை விசாரளை முடியும்வரை ஆயுதங்களை களையச் செய்து உத்தரவிட்டு பின்லேடனை தலைமை கமாண்டர் உமர் முல்லா அவர்களின் உத்தரவுக்கு கட்டுப்படும் படி பணித்தார்கள், அவரது கைப் பேசி வரை எவருடனும் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு பறித்துக் கொண்டு இவற்றிற்கு உடன்பட்டு ஒத்துழைத்தால் இங்கு தங்கலாம் விருப்பமில்லை என்றால் விரும்பிய நாட்டிற்கு இடம் பெயர்ந்து செல்லலாம் என்றத் தீர்ப்பையும் அவர்களது அரசாங்கம் இயங்கிய காலகட்டத்தில் உச்சநீதி மன்றம் அறிவித்தது ஆதாரம். நேற லுழரம வுiஅநளஇ 4-3-1999.
தாலிபான்களின் ஆட்சி பறிக்கப்பட்டு தொடர்ந்து அமெரிக்கா தாலிபான்களின் மீதான தாக்குதலை அதிகரிக்கச் செய்த பின்னரே அவர்கள் இணைந்து கொள்ளும் சூழ்நிலைக்குத் தள்ளப்ட்டனர்.
2. பின்லேடனின் அல்கைதா தான் தாலிபான்களை இயக்குகிறது, உலகில் நிகழும் அதிகமான குண்டு வெடிப்புகளுக்கு அல்கைதா தான் காரணம் என்றால் இதுவரை ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாதது ஏன் ?
3. ஆப்கானிஸ்தானில் படைகளை குவிப்பதால் தாலிபான்களை கொல்ல முடியாது என்று தெரிந்திருந்தும் அங்கு ஏன் படைகள் வலுக்கட்டாயமாக நிருத்தப்பட்டுள்ளது.
அதற்கான பதில்கள்.
உலகின் மூளையில் எதாவது ஒரு முஸ்லீம் நாடு ராணுவத்தில் அவர்களுக்கு நிகராக இருந்தால், அல்லது அதன் அண்டை நாட்டைத் தாக்கும் பலம் பெற்றிருந்தால், அல்லது லட்சியக் குழுவாக (குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் ) திகழ்ந்தால்.
அவர்களின் ராணுவ பலத்தை குறைக்கும் வரை, லட்சியக் குழுவினராகத் திகழ்பவர்களைப் பிரித்து பல கூறுகளாக்காத வரை ஓய மாட்டார்கள், உறங்க மாட்டார்கள், ஆயிரம் பொய் கூறி அங்கேப் படைகளை குவிப்பார்கள்.
ராணுவ பலமும், லட்சிய சிந்தனையும்.
வல்லரசு ரஷியப் படைகளுடன் நிகராக நின்றுப் போரிடுவதற்காக அப்பொழுது அமெரிக்காவினால் அதன் ஆதரவு நாடுகளாகிய சவுதி, எகிப்து வழிகளில் ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்ட ஏராளமான நவீன ரக ராணுவத் தளவாடங்கள் இதுவரை தாலிபான்களிடம் குவிந்து கிடக்கின்றன.
குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் மறுமையை முன்னோக்கிய லட்சியக் குழுவினராக திகழ்வதுடன் நாட்டை தங்களது வசமாக்கி அதையே சட்டமாகவும் நடைமுறைப் படுத்தியத்திவர்கள் தாலிபான்கள்.
அவர்கள் வெறுக்கும் இரண்டு அம்சங்களும் ஓரிடத்தில் (தாலிபான்களிடம்) அமைந்திருப்பதைக் கண்டால் சும்மா விடுவார்களா ?
கடந்த கிபி 1885ல் விக்டோரியா மஹாராணியின் பாராளுமன்றச் சபையில் பிரித்தானிய கோழைகள் ஒன்றுக்கூடி முஸ்லிம்களின் கிலாஃபத் நம்முடைய முன்னேற்றத்திற்கு தடைக் கல்லாகி விட்டது அதை அகற்ற என்னத் தீர்வு என்று வெட்கங்கெட்ட கோரிக்கையை எழுப்ப அதில் கிலாடுஸ்டோன் என்ற உறுப்பினர் எழுந்து திருக்குர்ஆனும், ஜூம்ஆ மற்றும், அரஃபா உரையும் நமது முன்னேற்றித்திற்கான தடைகற்கள் இவற்றை முஸ்லீம்களிடமிருந்து அகற்றினால் மட்டுமே நமது முன்னேற்றத்திற்கான தடை தாமாக விலகும் என்ற ஆலோசனையை முன்மொழிய அனைத்துக் கோழைகளும் அதனை வழிமொழிய அவற்றை நடைமுறைப் படுத்தி வெற்றியும் கண்ட வரலாறு அவர்களிடம் இருக்கிறது.
அடிக்கடி தாக்குதல் தொடுத்து சிறிது சிறிதாக ராணுவ பலத்தை குறைப்பதற்காகவும், தங்களது மிருக இனக் கலாச்சாரத்தை புகுத்தி அவர்களது மார்க்கப்பற்றை சிறிது சிறிதாக குறைப்பதற்காகவும் ஆயிரம் பொய் சொல்லி ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ளனர்.
எத்தனை அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்றவர் அமெரிக்காவின் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் அமெரிக்காவின் வர்த்தக சந்தை யூதர்களின் கோரப்படியில் சிக்கி இருக்கும் வரை இரத்தக்கரைப் படியாமல் அவர்களால் ஆட்சி பீடத்திலிருந்து இறங்க முடியாது.
வல்ல அல்லாஹ் இந்த அநியாயாக்காரர்களின் கணக்கை முடிக்கப் போதுமானவன்.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்


